யாழ் குடாநாட்டில் மாணவர்களது ஆக்கத் திறன் வெளிப்பாட்டு முன்னேற்றங்களை இப்போது பரவலாகக் காணக் கூடியதாக உள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்றைய தினம் (7) வேலணை பிரதேச சபை அம்பிகைநகர் முன்பள்ளி விளையாட்டுப் போட்டியில் கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் இங்கு கருத்து தெரிவித்த கந்தசாமி கமலேந்திரன் எமது மாணவர்கள் முதற்கொண்டு அனைத்துத் தரப்பினரதும் ஆக்கத் திறன் வெளிப்பாடுகள் நல்ல வளர்ச்சி நிலை பெற வேண்டும் என்றும் இத்திறன்களை அவர்கள் எமது சமூகத்தின் மேம்பாடு கருதி பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்ததுடன், எமக்குக் கிட்டக் கூடிய சந்தர்ப்பங்கள் அனைத்தையும் உரிய முறையில் பயன்படுத்தி எமது சமூகத்தினதும் பிரதேசங்களினதும் முன்னேற்றத்திற்கு அனைவரும் உழைக்க முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு ஈ.பி.டி.பி. யாழ் மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் வேலணை பிரதேச சபை செயலாளர் திரு தவராசா ஈ.பி.டி.பி.யின் வேலணை பிரதேச பொறுப்பாளர் திரு சிவராசா (போல்) ஆகியோர் பரிசில்களை வழங்கிக் கௌரவித்தனர்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக