ஹொலிவூட்டின் முன்னிலை நடிகைகளில் ஒருவரான ஜூலியா ரொபர்ட்ஸ் இந்து சமயத்தை பின்பற்றுவதாக அறிவித்துள்ளார்.
'ஏல்' எனும் சஞ்சிகையின் செப்டெம்பர் மாதப் பதிப்பிற்காக அளித்தபேட்டியொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
42 வயதான ஜூலியா ரொபர்ட்ஸ், பிரிட்டி வுமன் உட்பட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளதுடன் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதையும் வென்றவர். உலகின் 50 அழகிய பெண்களில் ஒருவராக பீப்பள்ஸ் சஞ்சிகையினால் 11 தடவை தெரிவு செய்யப்பட்ட ஜூலியாவை அமெரிக்காவின் 11 ஆவது சக்திவாய்ந்த பெண்ணாக லேடீஸ் ஹோம் ஜேர்னல் தெரிவு செய்திருந்தது.
தனது புதிய திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக அண்மையில் இந்தியாவுக்குச் சென்றபோது இந்து மதம் குறித்து அறிந்து தான் இந்துவாக மாறியதாக அவர் கூறியுள்ளார்.
தனது கணவர் டெனி மொடேர் மற்றும் தமது 3 பிள்ளைகள் ஆகியோரையும் அவர் தன்னுடன் இந்து ஆலயங்களுக்கு வழிபாட்டுக்கு அடிக்கடி அழைத்துச் செல்கிறாராம்.
தனது திரைப்பட நிறுவனத்திற்கு 'ரெட் ஓம் பில்ம்ஸ்' என ஜூலியா பெயரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மறுபிறவி குறித்து தான் நம்புவதகாக் கூறும் ஜுலியா ரொபர்ட்ஸ் அடுத்த பிறவியில் தனக்கு அமைதியான வாழ்க்கை கிடைக்க வேண்டும் விரும்புதாகத் தெரிவித்துள்ளார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக