அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 11 ஆகஸ்ட், 2010

விபசாரத்திற்காக சிங்கப்பூருக்கு அனுப்பப்படும் இலங்கை யுவதிகள்

லங்கை யுவதிகள் பலவந்தமாக விபசாரத்திற்காக சிங்கப்பூருக்கு அனுப்பப்படும் சட்டவிரோத நடவடிக்கை குறித்து, குற்றப்புலனாய்வுப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நடன நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதாகக்கூறி, மேற்படி யுவதிகள் விபசாரத்திற்குத் தள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது
.இதில் பலர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பெருந் தொகையான பணத்தை சம்பாதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்விடயம் குறித்து முழுமையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நடவடிக்கைக்கு பிரதான ஏற்பாட்டாளராக செயற்பட்டதாகக் கருதப்படும் நபர் ஒருவர் தற்போது குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு வட்டாரங்கள் இணையத்தளத்திற்குத் தெரிவித்தன.
சிங்கப்பூரிலுள்ள இலங்கைத் தூதரகம் இது குறித்து இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG