அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 11 ஆகஸ்ட், 2010

மேர்வின் விவகாரத்தில் ஐ.தே.கவுக்கு சந்தேகம்

பிரதியமைச்சர் பதவியிலிருந்து மேர்வின் சில்வா நீக்கப்பட்டமை, அவரின் ஒழுங்கீன நடத்தை தொடர்பான பொதுமக்களின் எதிர்ப்பை தணிப்பதற்கான ஒரு முயற்சி மாத்திரமேயாக இருக்கலாம் என ஐக்கிய தேசிய கட்சி சந்தேகம் தெரிவித்துள்ளது
.அரச ஊழியர் ஒருவரை மரத்தில் கட்டி வைத்தன் மூலம் சட்டத்தை மீறிய மேர்வின் சில்வாவுக்கு எதிராக மேலும் தாமதமின்றி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் உரையாற்றிய ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
"அச்சம்பவத்தன் மூலம் மேர்வின் சில்வா சட்டத்தை மீறியுள்ளார். அவர் சட்ட ரீதியாக தண்டிக்கப்பட வேண்டும். வெறுமனே, பதவியிலிருந்து நீக்குவது அந்த நோக்கத்தை நிறைவேற்றமாட்டாது. இவ்விடயத்தில் அரசாங்கம் உண்மையாக நடந்துகொள்கிறதா என நாம் சந்தேகிக்கிறோம். அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தால் அவரின் பாதுகாப்பு மற்றும் ஏனைய சலுகைகளும் வாபஸ் பெறப்பட வேண்டும்" என திஸ்ஸ அத்தநாயக்க கூறினார்.
அப்பிரதியமைச்சர் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட வேறு பல சம்பவங்களும் உள்ளன, ஆனால் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் அத்தநாயக்க தெரிவித்தார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG