அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 4 ஆகஸ்ட், 2010

இந்தோனேசிய நாடாளுமன்றத்தில் ஆபாச வீடியோ ஒளிபரப்பு

ந்தோனேசியாவின் நாடாளுமன்றத்தில் மிக ஆபாசமான பாலியல் வீடியோக் காட்சிகள் திரையிட்ட சம்பவம் பலரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

நாடாளுமன்றத்தின் தகவல் சேவை திரையில் நேற்று திங்கட்கிழமை அரசியல் நிகழ்வுகள் ஒளிபரப்பப்படுவதை எதிர்பார்த்து காத்திருந்தபோது ஆபாச பாலியல் வீடியோ ஒளிபரப்பட்டதைப் பார்த்த ஊடகவியலாளர்களும் அதிகாரிகளும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த ஆபாசக்காட்சிகள் வெளிப்படையாக இணையத் தளத்திலிருந்து பெறப்பட்டுள்ளது. செய்தியாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் பயன்படுத்தும் திரையில் இந்த வீடியோ 15 நிமிட நேரம் ஒளிபரப்பப்பட்டது. அதன்பின்னரே பாதுகாவலர்கள் அதை நிறுத்தியதாகவும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆபாசக் காட்சிகள் எவ்வாறு திரையில் தோன்றியது என்பது தெரியவில்லை. ஆனால் அதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவர் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவமானது அந்நாட்டு ஜனாதிபதியான சுசிலோ பாம்பாங் யுதோயோனாவிற்கு தர்ம சங்கடமான நிலையை தோற்றுவித்துள்ளது. அவர் அண்மையில் இணையத்தளங்களில் ஆபாசப் படங்களை கடுமையாக கட்டுப்படுத்தும்படி அதிகாரிகளை பணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG