யாழ். போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைபெற வரும் நோயாளர்கள் தமது தங்க நகைகள் குறித்து மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று வைத்தியசாலை பாதுகாப்பு தரப்பினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
அண்மைக்காலமாக யாழ். போதனா வைத்தியசாலையில் திருட்டுச் சம்பவங்கள் மிகவும் அதிகரித்துக் காணப்படுகின்றன. வெளி நோயாளர் பிரிவுகள் மற்றும் விடுதிகளிலேயே இந்த திருட்டுகள் இடம்பெற்று வருவதாக வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர். திருமதி பவானி பசுபதிராஜா தெரிவித்தார்.
இந்நிலையில், தமது நகைகளைப் பறிகொடுத்தவர்களால் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளரிடமும் பொலிஸ் நிலையத்திலும் முறையிட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிகிச்சைக்கு வரும் நோயாளர்கள் அருகில் உள்ளவர்களுடன் நண்பர்களாகப் பழகுவதுடன் எக்ஸ்றே ஸ்கானிங் போன்றவற்றுக்குச் செல்லும் போது அணிந்திருக்கும் நகைகளை தாம் வைத்திருப்பதாக வாங்கிய நிலையில் அவர்கள் அங்கிருந்து காணாமல் போவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதுமட்டுமன்றி வைத்தியசாலையின் ஊழியர்கள் போல் நடிப்பவர்களாலும் இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் புகாரிடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் மேலும் கூறினார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
புதன், 4 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்








.jpg)





















0 கருத்துகள்:
கருத்துரையிடுக