அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 28 ஜூலை, 2010

வெள்ளைக் கொடி விவகார விசாரணை: நாளை ஜெனரலுக்கு அழைப்பு

இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான விசாரணைக் குழுவிற்கு ஜெனரல் சரத் பொன்சேகாவை நாளை சமூகமளிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி உத்தரவிட்டுள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகா, சண்டே லீடர் ஊடகவியலாளரான பெட்ரிகா ஜேன்சிடம் தெரிவித்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்கான விசாரணை நாளை நடைபெறவுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த புலி உறுப்பினர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் சுட்டுக் கொள்ளுமாறு பிரிகேடியர் சவேந்திர சில்வாவிற்கு உத்தரவிட்டதாக ஜெனரல் சரத் பொன்சேகா சண்டே லீடருக்கு தெரிவித்தமை தொடர்பாக ஆராய்வதற்கு மூவர் அடங்கிய விசாரணைக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

BATTICALOA SONG