பொது தேர்தலுக்கு பின்னர் முதற் தடவையாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயற்குழு கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி கூடவுள்ளதாக அதன் செயலாளர் நாயகம் ஹசன் அலி இணையதளத்திற்கு சற்று முன் தெரிவித்தார்.
இக்கூட்டம் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெறவுள்ளது. இதன் போது தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பாக ஆராயப்படவுள்ளது.
அத்துடன் தமிழ் கூட்டமைப்புடனான சந்திப்பு, கிழக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் விவகாரம் மற்றும் கட்சியின் எதிர்கால நலன் குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி குறிப்பிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக