அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 22 ஜூன், 2010

இலங்கையரை விடுவிக்கக் கோரி மலேசியாவில் இன்று பேரணி

மலேசியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்கள் 75 பேரையும் விடுதலை செய்து அவர்கள் விரும்பும் இடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து மலேசியாவில் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படவிருக்கின்றது.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் நோக்கி பேரணி ஒன்றையும் நடத்தவிருக்கின்றனர்.
மலேசியாவில் முகாம்களில் அடைத்து வைத்துள்ள 75 ஈழத் தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்து அவர்கள் விரும்பும் இடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
போலி முகவர்கள் மூலம் வந்தவர்கள் என்று அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை வாபஸ் பெறவேண்டும்.
இவர்களை இலங்கை அரசு அழைத்தாலும் அங்கே இவர்களைத் திருப்பி அனுப்பக்கூடாது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தனியறைச்சிறையில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும்.
மேற்கண்ட ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்று செயலணித் தலைவர் கலைவாணர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஐ.நா. சபை அலுவலகம் நோக்கி பேரணியும் நடத்தப்படவுள்ளது.
பேரணியின் நிறைவில் ஐ.நாவின் கிழக்கு ஆசிய நாடுகளுக்கான பிரதிநிதி ஜமால் மல்கோத்ராவிடம் நேரடியாக மனுவைக் கையளித்து கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. _

0 கருத்துகள்:

BATTICALOA SONG