"புத்தா பார்" எனும் சர்வதேச உணவகம் ஒன்று சீனாவில் இயங்கிவருவதாகவும் அதன் தலைமையகம் பிரான்ஸ் நாட்டில் உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு இணையதளத்திற்கு தெரிவித்தது.
குறித்த மதுபான சாலைகளில் புத்த பகவானின் சிலைகள் காணப்படுவதாகவும், அந்த சிலைகளுக்கு முன்னால் மதுபானம் அருந்தப்படுவதுடன், நடன நிகழ்வுகளும் இடம்பெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இது உண்மையாக இருப்பின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக