அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 22 ஜூன், 2010

சுனாமியால் வீடுகளை இழந்த கல்முனை மக்களுக்கு இன்று வீடுகள் கையளிப்பு

கல்முனை பிரதேச செயலாளர் பிரிவிற்குள் சுனாமியால் வீடுகளை இழந்த மக்களுக்கென கட்டப்பட்ட வீடுகளில் 100 வீடுகள் மக்கள் பாவனைக்கு இன்று கையளிக்கப்பட்டதாக அங்கிருந்து  இணையதளத்திற்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பாறை மாவட்ட அரச அதிபரின் பணிப்புரைக்கமைய மேலதிக மாவட்ட அரச அதிபர் தர்சினி பிரசாந்த் தலைமையிலான குழுவொன்று கல்முனைக்கு வந்து இவ்வீடுகளை உரிய பயனாளிகளுக்கு கையளித்துள்ளனர்.
இதேவேளை, மிகுதியாக கல்முனை இரவெளிக்கண்டத்தில் உள்ள வீடுகளை இக்குழுவின் மேற்பார்வையின் கீழ் நாளை வழங்கப்படஉள்ளது.
எனினும், சுனாமியால பாதிக்கப்பட்ட மக்களுக்காக கல்முனை இரவெளிக்கண்டத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு, இதுவரைக்கும் மின்சாரம் மற்றும் நீர் வசதிகள் வழங்கப்படவில்லை என அங்குள்ள மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்
கடந்த புதன்கிழமை சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கட்டப்பட்ட வீடுகள் வழங்கப்படாததை கண்டித்து கல்முனை பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

0 கருத்துகள்:

BATTICALOA SONG