போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட பாகிஸ்தானிய பிரஜை ஒருவருக்கு இலங்கை உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தள்ளது.
72 வயதான பாகிஸ்தானியர் ஒருவர் இலங்கைக்கு ஹெரோயின் போதைப் பொருளை கடத்தியமை விசாரணைகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாகிஸ்தான் பிரஜை தம்மீது சுமத்தப்பட்ட 8 குற்றச்சாட்டுக்களை ஒப்புக் கொண்டுள்ளார்.நீர்கொழும்பு உயர் நீதிமன்றில் நடைபெற்ற விசாரணைகளின் போது நீதவான் ஷிரான் குணரட்ன இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
2008ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23ம் திகதி குறித்த சந்தேக நபர் பாகிஸ்தானிலிருந்து, 2074 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை கணனி உதிரிப் பாகங்களுக்குள் மறைத்து இலங்கைக்கு கடத்தியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக