கொழும்பு நகரில் உள்ள சகல குடிசை வீடுகளையும் அகற்றவும் அவர்களுக்குப் பொருத்தமான இடங்களில் வசதியான வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கவும் தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபே ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்ட நினைவுத் தூபியைத் திறந்து வைக்கும் நேற்றைய வைபவத்தில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.பிரதான நகரங்களிலுள்ள சகல சட்டவிரோதக் கடைகளையும் அகற்ற நகர அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நடவடிக்கை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டு கண்டி, காலி, மாத்தறை உட்பட பிரதான நகரங்களிலும் முன்னெடுக்கப்படும். பின்னர் ஏனைய நகரங்களில் ;உள்ள சட்டவிரோதக் கட்டிடங்களும் அகற்றப்படும். யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் அபிவிருத்தி குறித்தும் சுற்றுலா மேம்பாடு தொடர்பாகவும் கூடுதலாகப் பேசப்படுகிறது. கொழும்பு நகரை சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு ஏற்றவாறும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு உகந்தவாறும் அழகுபடுத்த வேண்டும். கொழும்பை அழகிய நகரமாக முன்னேற்றும் நடவடிக்கையின் ஒரு கட்டமாகவே சட்டவிரோத கட்டடங்களும் குடிசை வீடுகளும் அகற்றப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக