யாழில் இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட மாணவி மயக்கமுற்ற நிலையில் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
யாழ். மானிப்பாய் சங்கரப்பிள்ளை வீதியைச் சேர்ந்த 11 வயது மாணவி நேற்று மாலை இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டார். எனினும் சற்று முன்னர் மானிப்பாயில் உள்ள கைவிடப்பட்ட பகுதி ஒன்றிலிருந்து இராணுவத்தினர் இவரை மீட்டுள்ளனர்.நவாலி விவேகானந்தா வித்தியாலயத்தைச் சேர்ந்த மேற்படி மாணவி தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மனிப்பாய் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக