வன்னிப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியேறிய அனைத்து இடங்களிலும் தபால் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளதென வடபிராந்திய பிரதி அஞ்சல்மா அதிபதி வீ. குமரகுரு தெரிவித்துள்ளார்.
இதுவரையில் 18 இடங்களில் தபாலகங்கள் திறக்கப்பட்டுள்ளதெனக் குறிப்பிட்ட அவர் கடைசியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளையில் திறக்கப்பட்டுள்ளது எனவும் தபாலகங்கள் திறக்கப்படுவதினால் மீள்குடியேறியுள்ள அனைத்து மக்களுக்கும் எமது சேவை திருப்திகரமான முறையில் வழங்கப்படுகின்றதெனவும் பிரதி அஞ்சல் மா அதிபதி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது//கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மீள் குடியேற்றப்படுகின்ற நிலையில் நீதீத்துறையினை நிலைநாட்டும் முகமாக, கடந்த 30 வருடங்களிற்குப் பிற்பாடு எதிர்வரும் 10ஆம் திகதி முதல் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் இயங்கவுள்ளது.இந்நீதிமன்ற நிகழ்வை குடியியல் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜே.விஸ்வநாதன் ஆரம்பித்துவைக்கவுள்ளார்.
இம்மாவட்ட நீதிமன்றத்திற்கான நீதிபதியாக பெ.சிவகுமார் நீதிச்சேவை ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னர் நீதிமன்றம் இயங்கிய கட்டிடம் சேதமடைந்துள்ள காரணத்தால் தனியார் கட்டிடம் ஒன்றிலேயே இந்நீதிமன்றம் இயங்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக