யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களில் ஒரு தொகுதியினர் மன்னார் சின்னத்தண்டு வெடிச்சானில் இன்று
மீள்குடியேற்றப்படுவர் எனக் கூறப்பட்டது. எனினும், இதுவரை அவர்கள் மீள்குடியேற்றப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.சின்னத்தண்டு வெடிச்சானில் 68 குடும்பங்களைச் சேர்ந்த 234 பேர் இன்று வெள்ளிக்கிழமை மீள்குடியேற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இன்றைய தினம் அங்கு துப்புரவுப் பணிகளே இடம்பெற்று வருவதாகவும் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக