உப்புவெளி பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவர் இரண்டு மாணவிகள் மீது வல்லுறவு மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலை உப்புவெளி பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் இல்லமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சிறுவர் இல்லத்தை பராமரித்து வந்த பௌத்த பிக்குவே இவ்வாறு பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
15 மற்றும் 17 வயதுடைய சிறுமிகளே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் காரணமாக பிரதேசத்தில் ஓரளவு பதற்ற நிலை உருவானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமக்கு ஏற்பட்ட நிலைமை குறித்து ஆசிரியை ஒருவரின் ஊடாக பாடசாலை அதிபருக்கு குறித்த மாணவிகள் அறிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய பௌத்த பிக்குவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக