இலங்கையில் நடைபெறவுள்ள திரைப்பட விருது வழங்கும் விழாவிற்கு அமிதாப்பச்சன் குழுவினர் நிச்சயம் கலந்து கொள்வார்கள் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதில் எவ்வித சந்தேகமும் தேவையில்லை என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
சர்வதேச இந்திய திரைப்பட அகடமியின் விருது வழங்கும் வைபவம் குறித்த ஊடகவியலாளர்கள் மாநாடொன்று நேற்றைய தினம் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது.ஹிந்தி திரையுலகத்தினர் இந்நிகழ்வில் கலந்து கொள்வது குறித்து தமிழக திரையுலகத்தினரால் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பப்பட்ட வேளையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக