"ஊடகவியலாளர்களுக்கு 'சயனைட்' ஊட்டி, ஊடகத்தை கொன்றுவிட்டீர்கள். இவ்வாறானதொரு நிலையில் ஜனநாயகத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் 'சயனைட்' ஊட்ட வேண்டாம்" என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க சபையில் நேற்று தெரிவித்தார்.
நாடாளுமன்றத்திலேயே சட்டங்கள் இயற்றப்படுகின்றன என்பதனால் சபையை இராணுவச் சட்டத்திற்குள் உட்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இறக்குமதிகள் ஏற்றுமதிகள் கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
"ஜெனரல் பொன்சேகாவை நாடாளுமன்றத்திற்கு நேற்று (நேற்று முன்தினம்) வருவதற்கு அனுமதியளிக்கவில்லை. இது சிறப்புரிமை பிரச்சினை மட்டுமல்ல, மனித உரிமை பிரச்சினையுமாகும்.
எம்.பிக்கு ஏன் சபைக்கு வர முடியாது? ஜெனரலை விடுவிக்காமல் ஜி.எஸ்.பி. பிளஸை பெற்றுக் கொள்ள முடியாது. அவரை விடுதலைச் செய்தால் மட்டுமே அந்தச் சலுகையைப் பெற்றுக் கொள்ள முடியும்.
மேற்குலக நாடுகளில் 'கறுவா' விற்றால் மட்டுந்தான் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியுமா? ஆடைத் தொழிற்துறை முக்கியமானது. அதனை மேம்படுத்தவும் சலுகையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
சுற்றுலாத் துறையைப் பொருளாதார அமைச்சுக்குள்ளும் நகர அபிவிருத்தி அதிகார சபையை பாதுகாப்பு அமைச்சின் கீழும் கொண்டு வந்திருப்பதன் மூலமாக எதனைச் செய்ய முடியும்? முன்னுக்குப் பின் முரணான அமைச்சுக்களையும் நிறுவனங்களையும் இணைப்பதன் மூலமாக ஜனநாயகத்தை நிலைநாட்டவோ, பொருளாதாரத்தை மேம்படுத்தவோ முடியாது.
ஒரு விடயம் தொடர்பில் கலந்துரையாடும் போது சட்டமா அதிபருடன் மட்டும் கலந்துரையாடாது அது தொடர்பில் இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
சட்டமா அதிபர் திணைக்களம் நீதியமைச்சின் கீழ் இல்லை. ஜனாதிபதியின் கீழேயே இன்று இருக்கின்றது. பாதுகாப்பு அமைச்சும் ஜனாதிபதியின் கீழேயே இருக்கின்றது. வழக்குகளை விசாரிப்பவர்களை நீதிச் சேவை ஆணைக்குழுவே நியமிக்க வேண்டும். ஆனால் இன்று அப்படியில்லை.
பொருளாதாரத்தை வர்த்தமானி அறிவித்தல் மூலமாக மேம்படுத்த முடியாது. அதுபோல், 'கஞ்சா' உற்பத்தி செய்வதன் மூலமாக பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது" என்றார். _
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 7 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக