அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 6 ஏப்ரல், 2010

ஓஷியானிக் கப்பல் அகதிகளில் 28 இலங்கையரை ஏற்க அமெரிக்கா இணக்கம் _

ஆஸ்திரேலியக் கடலில் ஓஷியானிக் விக்கிங் கப்பலிலிருந்து கடந்த ஒக்டோபர் மாதம் மீட்கப்பட்ட 78 இலங்கை அகதிகளில் 28 பேருக்கு அரசியல் தஞ்சம் வழங்க அமெரிக்கா இணங்கியுள்ளது.
ஏனைய 50 அகதிகளும், நியூஸிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் நோர்வே ஆகிய நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி இலங்கை அகதிகள் 28 பேரும் அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.

அதேவேளை, அவுஸ்திரேலியா கியூபாவைச் சேர்ந்த 3 அகதிகளை ஏற்றுக் கொள்வதற்கு இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்தோனேஷியக் கடற்பரப்பில் பிடிபட்டு. மராக் துறைமுகத்தில் தரித்திருக்கும் கப்பலில் உள்ள 254 இலங்கை அகதிகள் தொடர்பில் இன்னமும் எதுவித முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG