
எதிர்வரும் ஒன்பதாம் திகதி மீண்டும் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற பதில் பொதுசெயலாளருக்கு அறிவித்துள்ளார்.
ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கை மூலம் தமக்கு அறிவிக்கப்பட்டதாக பதில் பொதுசெயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார். அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதகாலப்பகுதிக்கு நீடிக்கும் பிரேரணையை சமர்ப்பிப்பதன் பொருட்டே நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படவுள்ளது. இதன்படி எதிர்வரும் ஒன்பதாம் திகதி காலை 9.30 அளவில் நாடாளுமன்றத்தை கூட்டுவது சிறந்தது என ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இந்த விடயம் தொடர்பாக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விசேட கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல் ஊடாக நாளை அறிவிக்கவுள்ளதாகவும் நாடாளுமன்ற பதில் பொதுசெயலாளர் நீல் இத்தவெல குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக