அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 16 மார்ச், 2010

செய்தியறிக்கை


 

மைக்கல் ஓரென்
மைக்கல் ஓரென்
"சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நெருக்கடியில் அமெரிக்க-இஸ்ரேல் உறவு"
அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவு ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நெருக்கடியை எட்டியுள்ளதாக அமெரிக்காவுக்கான இஸ்ரேலிய தூதுவர், மைக்கல் ஒரென் கூறியுள்ளதாக இஸ்ரேலிய ஊடக செய்திகள் கூறுகின்றன.
தமது நாடு எதிர்கொள்கின்ற நெருக்கடி மிகவும் முக்கியமானது என்று வார இறுதியில் இஸ்ரேலிய இராஜதந்திரிகளிடம் ஒரென் கூறியுள்ளார்.
இஸ்ரேலுக்கு அமெரிக்க துணை அதிபர் ஜோ பைடன் அவர்கள் வந்த வேளையில், ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூசலம் பகுதியில் புதிய யூத குடியிருப்புக்களை அமைப்பதற்கான அறிவித்தல் வந்தமை குறித்து தான் வருத்தம் கொள்வதாக ஞாயிறன்று கூறியதன் மூலம் இந்த விவகாரத்தின் தீவிரத்தை குறைக்க இஸ்ரேலிய பிரதமர் பின்யமின் நெதன்யாகு முயற்சித்தார்.
இதற்கிடையே இந்த புதிய குடியிருப்புகளை அமைப்பதற்கான இஸ்ரேலிய முடிவு மத்திய கிழக்கு பேச்சுவார்த்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைக்கான புதிய தலைமை அதிகாரி, கத்தரின் அஸ்டன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய குடியிருப்புக்கள் சட்டவிரோதமானவை என்றும், அமைதிக்கு பங்கம் விளைவிப்பவை என்று ஐரோப்பிய ஒன்றியம் பார்ப்பதாகவும் அவர் கூறினார்.


போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
பர்மா பல ஆண்டுகளாக இராணுவ ஆட்சியின் கீழ் இருந்துவருகிறது
பர்மாவில் போர்க் குற்றங்களும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களும் நடைபெறுகின்றனவா என கண்டறிய விசாரணை ஒன்றுக்கு ஐக்கிய நாடுகள் சபை பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் அங்கு சென்று திரும்பிய விசேடத் தூதரான தாம்ஸ் குவிண்டானா, பர்மாவின் இராணுவ ஆட்சியாளர்கள் அங்கு நிலவும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்தாத காரணத்தால், இந்த ஆண்டு அங்கு நடைபெறவுள்ள தேர்தல் நம்பகத்தன்மையுடன் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
சிறார்களை படைகளில் சேர்ப்பது, சொந்தக் கருத்துக்களை வெளியிட்டதற்காக இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவர்களை கைது செய்துள்ளது போன்ற மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக ஐ.நா.வின் அந்தச் சிறப்பு பிரதிநிதி சுட்டிக் காட்டியுள்ளார்.
ஆனால் ஐ.நா.வுக்கான பரிமீயத் தூதரோ இவையெல்லாம் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் என்று கூறியுள்ளார்.


தாய்லாந்தில் மீண்டும் ஆர்ப்பாட்டம்; ஆனால் தேர்தல் கோரிக்கை நிராகரிப்பு
அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள்
தாய்லாந்தில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இரண்டாவது நாளாக தலைநகர் பாங்காக்கின் வீதிகளில் இடம்பெற்றுள்ளன.
அங்கிருக்கும் அரசை ராஜிநாமா செய்ய வலியுறுத்தும் மேலும் ஒரு முயற்சியாக இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.
ஆர்பாட்டக்காரர்கள் ஒரு கட்டத்தில் இராணுவத்தினர் தங்கியிருக்கும் முகாம்களை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். அங்கு அவர்களை சந்தித்த பிரதமர் அபிஷ்ட் விஜேஜீவா இடைக்கால தேர்தலுக்கான கோரிக்கையை நிராகரித்தார்.
போராட்டக்காரர்களில் பெரும்பாலானர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்ட தக்ஷின் ஷிண்வாத்ராவின் ஆதரவாளர்கள்.
அவர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தும் நோக்கில் தங்களது ரத்தத்தை சேகரித்து அதை நாடாளுமன்றத்தின் தெளிக்கப் போவதாக தற்போது எச்சரித்துள்ளளனர்.
நாட்டில் தற்போது ஆட்சியில் இருக்கும் அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்படாததால் அது சட்டவிரோதமானது என்று அவர்கள் கூறுகிறார்கள்.


வெளிநாட்டு விந்துக் கொடையாளி மூலம் துருக்கியப் பெண்கள் செயற்கை முறையில் கருத்தரிப்பதற்குத் தடை
செயற்கை கருத்தரிப்பு
வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு கொடையாளியின் விந்துமூலம் துருக்கியைச் சேர்ந்த ஒரு பெண் செயற்கை முறையில் கருத்தரிப்பதை துருக்கி குற்றச்செயலாக்கியுள்ளது.
செயற்கை முறையில் விந்தைச் செலுத்துவது துருக்கியைப் பொறுத்தவரை ஏற்கனவே சட்டவிரோதமானதாகவே இருக்கிறது. ஆனால், இந்த புதிய சட்டம் வரும் வரை ஒரு பெண் வெளிநாட்டுக்குச் சென்று ஒரு வெளிநாட்டவரின் விந்தைப் பெற்று செயற்கையாக கருத்தரிக்கமுடியும்.
தமது குழந்தைகளின் பெற்றோர் யார் என்பதை மறைத்து வைப்பதை தடை செய்யும் துருக்கிய குற்றவியல் சட்டத்தின் ஒரு பிரிவின் மூலம் இந்த புதிய விதி கையாளப்படுகின்றது.


நைஜீரியாவில் ஆயுததாரிகளுடனான பேச்சுவார்த்தைகளின்போது குண்டுவெடிப்பு
நைஜீரியாவில் எண்ணெய் வளம் மிக்க டெல்டா பகுதியில் ஆயுததாரிகளுடன் பொதுமன்னிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தபோது குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.
தெற்கு நகரமான வர்ரியில் மாகாண ஆளுநரின் அலுவலகத்துக்கு அருகில் இந்த குண்டு வெடிப்புகள் இடம் பெற்றுள்ளன.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் இந்த குண்டு வெடிப்புகளில் ஜன்னல்களின் கண்ணாடிகள் வெடித்து சிதறியதாகவும், உலோகத் துண்டுகள் பல திசைகளிலும் பறந்து வந்ததாகவும் கூறுகிறார்கள்.
அப்பகுதியில் எரிந்த இரு கார்களை சோதனை செய்துவருகிறார்கள். நைஜர் டெல்டா பகுதியின் மேம்பாட்டுக்கான இயக்கத்தின் ஒரு பிரிவினர் இந்தப் பேச்சுவார்தைகளின்போது தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்திருந்தது.
நைஜீரிய நாட்டு அரசு பொதுமன்னிப்பு தொடர்பான தகவலை வெளியிடவில்லை என்று கூறி இந்தப் பிரிவினர் கூறிவருகிறார்கள்.
கார் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளமை ஆயுததாரிகளின் தாக்குதல் உத்தியில் கணிசமான மாறுதலை குறிக்கிறது என லேகோஸில் இருக்கும் பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.
 
 

0 கருத்துகள்:

BATTICALOA SONG