அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 16 மார்ச், 2010

விருப்பு வாக்குகளுக்காக மோதல்களில் ஈடுபடும் ஆளும் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை : ஜனாதிபதி

Loogix.com. Animated avatars.
விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலேயே மோதிக் கொள்ளும் வேட்பாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
இவ்வாறு கட்சி விதிகளை மீறிச் செயற்படும் வேட்பாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூட்டணி கட்சி பொதுச் செயலாளர்களிடம் கோரியுள்ளார்.
வேட்பு மனுத் தாக்கல் செய்ததன் பின்னர் அனுராதபுரத்தில் சகல வேட்பாளர்களும் ஜனாதிபதி முன்னிலையில் அளித்த உறுதிமொழியை எவரும் மீறக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சில மாவட்டங்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்ற வேட்பாளர்களுக்கு இடையில் தீவிர விருப்பு வாக்கு முறுகல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ஒழுக்க விதிகளை மீறிச் செயற்படும் வேட்பாளர்களுக்கு வாக்காளர்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டுமென கட்சி கோரியுள்ளது

0 கருத்துகள்:

BATTICALOA SONG