![]() | |
| ஏராளமான இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் பட்டப்படிப்பு படித்துவருகிறார்கள் |
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்களை ஏற்படுத்தி மாணவர்களுக்கு பட்டப்படிப்பு வழங்க இந்திய அரசு அனுமதி
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்களை ஏற்படுத்தி பட்டப்படிப்புக்கான வசதிகளை வழங்கும் திட்டம் ஒன்றுக்கு இந்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்திய அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்ட இந்தத் திட்டத்துக்கு நாடாளுமன்ற அங்கீகாரம் பெறப்பட வேண்டும்
. இத்திட்டத்துக்கு அங்கீகாரம் கிடைக்கும் பட்சத்தில் வெளிநாடு சென்று கல்விகற்க விழையும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களுக்கு உள்ளூரிலேயே வெளிநாட்டுப் பல்கலைக்கழக பட்டங்களைப் பெற அது உதவும்.
பெரும் கட்டணம் கட்டி வசதி பெற்ற பெரும் பணக்கார மாணவர்களுக்கு மாத்திரமே இது உதவும் என்று கூறி இந்த சட்டமூலத்தை சில கட்சிகள் பல வருடங்களாக எதிர்த்துவந்தன.
தகமை பெற்ற பட்டதாரிகள் இந்தியாவில் போதுமான அளவில் இல்லை என்ற கவலைகளுக்கு மத்தியில், இந்தியா தனது உயர்கல்வித்துறையை மறுசீரமைத்துக் கொண்டிருக்கிறது.
இந்த அனுமதி தொடர்பில் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் டாக்டர். பாலகுருசாமி தமிழோசையிடம் வெளியிட்ட கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
அணு விபத்துக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் பொறுப்பாகாமல் தடுக்கும் சட்ட மசோதா அறிமுகம் ஒத்திவைப்பு
![]() | |
| இந்திய அணுமின் நிலையம் ஒன்று |
இந்திய அமெரிக்க சிவில் அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து, அமெரிக்க அணு மின்சக்தி நிறுவனங்கள் இந்தியாவில் புதிய அணு உலைகளை நிர்மாணித்து தர போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன.
பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளும் போட்டியில் இருக்கின்றன.
இந்த நிலையில், இத்தகைய நிறுவனங்களால் விற்கப்பட்ட அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால், அதன் காரணமாக ஏற்படக்கூடிய அழிவுக்கு, நஷ்ட ஈட்டைக் கோரி யாரும் இந்த நிறுவனங்கள் மீது வெளிநாட்டு நீதி மன்றங்களில் வழக்கு தொடர முடியாது என்ற ஷரத்து அடங்கிய புதிய சர்ச்சைக்குரிய மசோதா ஒன்றை இந்திய அரசு நாடாளுமன்றத்தில் இன்று அறிமுகப்படுத்த இருந்தது.
ஆனால் இந்த மசோதாவிற்கு பரவலான எதிர்ப்பு இருக்கும் என்ற காரணத்தால் இன்று அந்த மசோதாவை அறிமுகப்படுத்துவதை இந்திய அரசு ஒத்தி வைத்துவிட்டது.
இந்த ஒத்திவைப்பு குறித்து அணு மின்சக்தி எதிர்ப்பு இயக்கங்களின் தேசிய கூட்டணி என்ற தன்னார்வ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயக்குமார் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
![]() | |
| முன்னாள் பிரதம நீதியரசரான சரத் என் சில்வா |
இந்த முடிவு சட்டத்துக்கு முரணானதும் கூட என்று கூறிய சரத் என் சில்வா அவர்கள், நாட்டில் ஜனநாயகம் கிடையாது என்றும் கூறி ஆதங்கப்பட்டுள்ளார்.
செய்தியாளர்கள் மத்தியில் பேசிய சரத் என் சில்வவா அவர்கள், சிவிலியன் சட்டங்களின் அடிப்படையில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் கூட சரத் பொன்சேகாவை கைது செய்திருக்க முடியும் என்றும், இராணுவ சட்டங்களின் அடிப்படையில் அவரை ஒரு உயர் மட்ட அதிகாரியே கைதுசெய்ய முடியும் என்றும் கூறினார்.
அத்துடன் இந்த மாதிரி நடவடிக்கைகளை உலகில் வேறு எங்கும் காணமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஜூன் மாதத்தில் தான் சில்வா அவர்கள் தலைமை நீதியரசர் பதவியில் இருந்து ஓய்வுபெற்றார். அதன் பின்னர் கடந்த ஜானதிபதி தேர்தலின் போது அவர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
அவருக்கு எதிராக இராணுவ நீதிமன்ற விசாரணை கொண்டுவரப்படுவது அரசியல் அமைப்புக்கு முரணானது என்று சரத் என் சில்வா கூறுகிறார்.
இலங்கையின் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள ஐ.நா.வின் உரிமைகள் நியமத்தையும் இந்நடவடிக்கை மீறுவதாகவும் அவர் கூறுகிறார்.
ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
![]() | |
| வில்லியம் ஷேக்ஸ்பியர் |
இந்த நாடகம் ஷேக்ஸ்பியரின் படைப்புதான் என்று கல்விமான்களின் அனுமதி முத்திரை கிடைத்த பின்னர் 'டபுள் ஃபால்ஸ்ஹுட் என்ற இந்த நாடகம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
மொழிச் செறிவிலும், கற்பனை வளத்திலும், உருவக வர்ணனையிலும் இந்த நாடக இலக்கியம் மிகவும் செழுமையாக உள்ளது என்பதில் சந்தேகமில்லை.
'டபுள் ஃபால்ஸ்ஹுட்' என்ற இந்த நாடகம் இருப்பதே பதினெட்டாம் நூற்றாண்டில்தான் முதன்முதலில் தெரியவந்தது. ஆனால் இது உண்மையில் ஷேக்ஸ்பியரின் படைப்பு அல்ல ஏமாற்று வேலை என்று கூறி அச்சமயம் நிராகரிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது இந்த நாடகத்தை மீளாய்வு செய்த இலக்கிய நிபுணர்கள், இதனை எழுதியது ஷேக்ஸ்பியர்தான், அனால் ஜான் ஃபிலெட்சர் என்ற இன்னொரு நாடக ஆசிரியருடன் சேர்ந்து அவர் இதனை எழுதியுள்ளார் என்று ஒப்புக்கொண்டுள்ளனர்.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்









தமிழோசை























0 கருத்துகள்:
கருத்துரையிடுக