
17.03.2010 தொடக்கம் குடியேற்றத்திற்கு அல்லாத சகல விசா விண்ணப்பதாரர்களும் 12.03.2010 லிருந்து இணையத்தளத்தில் வெளியிடப்படும் DS-160 படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்று தூதரகம் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசா விண்ணப்ப நடைமுறைகளை மிகச் சரியாகவும் திறமையாகவும் மேற்கொள்வதற்கு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கான பெருமுயற்சியின் ஒரு பகுதியாக அமெரிக்க அரசாங்கம் உலகளாவிய ரீதியில் இப்புதிய படிவங்களை அறிமுகம் செய்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக, தேர்ந்தெடுக்கப்பட்ட சில அமெரிக்க தூதரகங்கள் பரீட்சார்த்தமாக DS-160 படிவத்தை பயன்படுத்தியுள்ளன. தற்போது உலகெங்கிலும் உள்ள அமெரிக்க தூதரகங்கள் இப்படிவத்தை பயன்படுத்தி வருகின்றன.
இலங்கையிலும் மாலைதீவு குடியரசிலும் உள்ள விசா விண்ணப்பதாரர்கள் புதிய DS-160 விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய காவற்றூதர் (கொன்சியூலர்) இலத்திரன் விண்ணப்ப நிலைய இணையத்தளத்தை (https://ceac.state.gov/GVNNIV) பார்க்க வேண்டும். புதிய படிவம் நடைமுறைக்கு வருவதுடன் விண்ணப்பதாரர் விசா புகைப்படம் ஒன்றையும் இணைக்க (அப்லோட் செய்ய) வேண்டும். இனிமேல் விசா விண்ணப்பதாரர்கள் இலத்திரனியல் முறையில் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதால் தற்போது இருந்துவரும் கடதாசிப் படிவ நடைமுறையை DS-160 இல்லாமல் செய்து விடுகிறது.
DS-160 நடைமுறைக்கு வருவதுடன் விண்ணப்பதாரர்கள் நேர்முகப் பரீட்சைக்கு வரும்போது கொண்டு வருவதற்காக ஒரு உறுதிப்பாட்டு தாளை மட்டும் அச்சிட வேண்டும். தற்போது, விண்ணப்பதாரர்கள் இணையத்தளத்தில் அவர்களது படிவங்களை பூர்த்தி செய்கிறார்கள். ஆனால் அவர்களது நேர்முகப் பரீட்சைக்கு முன்னதாக அவற்றை அச்சிட்டு எடுக்க வேண்டும்.
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கு முன்னர் விண்ணப்பத்தில் அவர்கள் மிகச் சரியானதும் DS-160 பூரணமானதுமான தகவல்களை வழங்குவது அவசியமாகும். தவறான அல்லது பற்றாக்குறையான தகவல்களை கொடுப்பதால் உங்கள் நேர்முகப் பரீட்சை நிறைவுபெறுவது தாமதமாகலாம். மாற்றங்கள் அவசியப்படக்கூடும் என்பதால் விண்ணப்பதாரர்கள் அவர்களது DS-160 இன் ஒரு இலத்திரன் பிரதியை சேவ் பண்ணி வைத்திருக்க வேண்டும்.
குடியேற்றம் அல்லாத விசா விண்ணப் பதாரர்களுக்கு மட்டுமே DS-160 விண் ணப்ப நடைமுறை தேவைப்படும். குடியேற்ற அல்லது நிதி விசாக்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏற்கனவே நடைமுறையிலுள்ள விண்ணப்ப படிவங்களை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.
விசா படிவமும் அதனை விண்ணப்பதாரர் பயன்படுத்தும் முறையும் மட்டுமே மாற்றமடைந்துள்ளன. சகல விசாக்களுக்கான தகைமையிலும் ஆவண தேவைகளிலும் மாற்றம் எதுவும் இல்லை. இன்னமும், விண்ணப்பதாரர்கள் அமெரிக்க குடிவரவு சட்டத்தின் கீழ் தாங்கள் தகைமை உடையவர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
DS-160 பற்றி மேலும் தகவல்கள், புதிய விண்ணப்பத்திற்கான தொடர்புகள் ஆகியவற்றை கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் இணையத்தளம் http:/srilanka.-usembassv.gov/ இல் பார்வையிடலாம்.
1 கருத்துகள்:
நல்ல பதிவு , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக