
இலங்கையின் தமிழர் உட்பட்ட சமூகங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய உரிய அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என இந்தியா மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஸ்ணா, இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்
இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து புதிய ஆரம்பத்திற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் இனப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வை காண வேண்டியதன் அவசியம் உணரப்பட்டுள்ளதாக கிருஸ்ணா குறிப்பிட்டுள்ளார்
ஐக்கிய இலங்கைக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்படவேண்டும். இதற்கான அழுத்தங்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக கிருஸ்ணா தம்மிடம் தொடுக்கப்பட்ட எழுத்துமூல கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக