கடந்த வருடம் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரின்போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் புறக்கணித்துள்ளது. அத்துடன் இலங்கை மீது எந்நேரமும் குற்றம் சுமத்துவதை விடுத்து வடக்கு கிழக்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களில் அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டும் எனவும் இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.
அரசாங்க ஆதரவிலான துணை இராணுவக் குழுக்களும் பாதுகாப்பு படைகளும் சிவிலியன்கள் மீது ஆயுதத் தாக்குதல்களை நடத்தியதõகவும் சித்திரவதை, ஆட்கடத்தல், ஆட்களை பணயம் வைத்தல், பணம் பறித்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்தவரும் மனித உரிமை மீறலுக்காக எந்தவொரு இராணுவத்தினரையோ பொலிஸ்ரையோ அல்லது துணை இராணுவ உறுப்பினரையோ எந்தவொரு சிவில் அல்லது இராணுவ நீதிமன்றமோ விசாரணை செய்து தண்டனை வழங்கியதாக செய்தி எதுவும் வெளியõகவில்லை எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது.அத்துடன் அரசியல் அமைப்புச் சபையை அமைக்கத் தவறியதன் மூலம் மனித உரிøமகள் ஆணைக்குழு இலஞ்ச விசாரணை ஆணைக்குழு பொலிஸ் ஆணைக்குழு நீதிச் சேøவகள் ஆணைக்குழு போன்றவற்றுக்கான பிரதிநிதிகள் நியமிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறுகையில் ""அவர்கள் (அமெரிக்கா) இத்தகைய விமர்சனங்களை நிறுத்திவிட்டு வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப் பட் டுள்ள அபிவிருத்திகளை கவனத்திற்கொள்ள வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக