அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 1 மே, 2013

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிக்கு ஆதரவு: ஸ்ரீலால் லக்திலக்க


திர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாகவே செயற்பட்டு வருவதாக மேல் மாகாணசபை உறுப்பினர் ஸ்ரீலால் லக்திலக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கத்திற்கும் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாகவும், இதனால் கட்சியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்வதில் நெருக்கடி நிலைமைகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிறைவேற்று அதிகாரம் நிலவி வரும் நாடுகளில் ஊழல் மோசடிகள் அதிகமாக இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். சிறுபான்மை மக்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிகொள்ள முடியும் என ரணில் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார். சிங்கள பௌத்த வாக்குகளின் ஒத்துழைப்பின்றி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்ட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG