ம ன்னாருக்காண விஜயத்தை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி குழுவினர் இன்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் ஆயர் இல்லத்திற்கு விஜயம் செய்தனர். இதன்போது, மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது மன்னார் நகர சபை, மன்னார் பிஜைகள் குழு, தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவை, காணாமல் போன உறவுகளை தேடும் குடும்பங்களின் அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகளும் காணாமல் போனவர்களின் உறவினர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது பல தரப்பட்ட விடயங்கள் ஆராயப்பட்ட நிலையில் மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் காணாமல் போனதாக கூறப்படும் சுமார் 472 பேருடைய விபரங்கள் காணாமல் போன உறவுகளை தேடும் குடும்பங்களின் அமைப்பின் தலைவி எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்தார்.
குறித்த சந்திப்பின் போது மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு, மன்னார் மறை மாவட்ட குருமுதல்வர் அன்டனி விக்டர் சோசை, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜயலத் ஜயவர்த்தனா, ரவி கருநாநாயக்க, திஸ்ஸ அத்தநாயக்க, கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முசம்மில் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை, எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்கள்
முஸ்ஸிம் மத பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடினர்.
இதனைத் தொடர்ந்து மன்னார் நகர சபை மண்டபத்தில் பொதுக்கூட்டம் இடம்பெற்றது. இதன்போது மீனவ சங்க பிரதிநிதிகள், விவசாய அமைப்புக்கள், மாதர் மற்றும் கிராம சங்க பிரதிநிதிகள், வர்த்தகர்கள் என பல நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள், விவசாயிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக குறித்த குழுவினருக்கு தெரியப்படுத்தினர்.
-->
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
திங்கள், 29 ஏப்ரல், 2013
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக