திருக்கோவில், சாகாமம் - பெரியதளாவாய் வயல் பிரதேசத்தில் வேளாண்மைக்கு காவலுக்கு இருந்த ஒருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது என திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் விநாயகபுரம் முதலாம் பிரிவு கிருஷ்ணா வீதியைச் சேர்ந்த 58 வயதுடைய விவசாயியான சாமித்தம்பி பழனிவேல் என்பவரே உயிரிழந்துள்ளார்
இந்த வயல் பிரதேசத்திற்கு வழமை போல் வேளாண்மை காவலுக்காக சம்பவ தினமான நேற்று மாலை சென்று காவலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இரவு திடீரென வந்த காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலே இவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்
இதேவேளை, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோப்பாவெளி எனும் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். போரதீவுப்பற்று பிரதேசத்தின் பலாச்சோலைக் கிராமத்தினை சேர்ந்த 71 வயதுடைய சாமித்தம்பி சரவணமுத்து எனபவரே உயிரிழந்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை அதிகாலை மூன்று மணியளவில கால்நடைகளை கட்டிவிட்டு அருகிலுள்ள குடிசையில்; குறித்த நபர் நித்திரை செய்துள்ளார். அவ்வேளையில் வந்த காட்டு யானை இவரை தாக்கியுள்ளது.
இதனால் படுகாயமடைந்த இவர், கரடியநாறு வைத்தியசாலையல் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி உயிழிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
-->
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
திங்கள், 29 ஏப்ரல், 2013
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக