அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 18 மார்ச், 2013

யாழ்.மத்தியகல்லூரியின் வளர்ச்சிக்காக பல்வேறு வழிகளிலும் உதவிய அமைச்சருக்கு கல்லூரிச் சமூகம் நன்றி தெரிவிப்பு

யாழ்.மத்திய கல்லூரியின் பழைய மாணவ சமூகத்தால் வருடந்தோறும் முன்னெடுக்கப்பட்டு வரும் சென்றல் இரவு நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
மத்திய கல்லூரி வளாகத்தில் நேற்றைய தினம் (16) இடம்பெற்ற மேற்படி நிகழ்விலேயே அமைச்சர் அவர்கள் கலந்து கொண்டார். வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்.மத்தியகல்லூரி மற்றும் பரி.யோவான் கல்லூரிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நேற்றைய தினம் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த நிகழ்வு பழைய மாணவர் சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.

பழைய மாணவர் சங்கச் செயலாளர் ஐங்கரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புலம்பெயர் நாடுகளில் வாழும் பழைய மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது யாழ்.மத்தியகல்லூரி வளாகத்தில் புதிதாக நீச்சல் தடாகத்தை அமைக்கவும், அதற்காக பல்வேறு வழிகளிலும் பங்காற்றிய கல்லூரியின் பழைய மாணவனும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு கல்லூரிச் சமூகம் சார்பில் பழைய மாணவர்கள் தமது நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.















  -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG