அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

முன்னாள் புலி உறுப்பினர் மீது துப்பாக்கி சூடு

ன்னம்பிட்டிய, மட்டக்களப்பு சந்தியில் வைத்து துப்பாக்கி பிரயோகத்தில் முன்னாள் உறுப்பினர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திலேயே அவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. அவர், வெலிக்கந்த புனர்வாழ்வளிப்பு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்றுவந்த நிலையில் தப்பியோடியவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த முன்னாள் புலி உறுப்பினருடன் இன்னும் இருவர் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரிடமிருந்து ரீ-56 ரக துப்பர்கியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புணானை பகுதியில் வைத்து காரை கடத்திக்கொண்டு தப்பிச்சென்றபோதே அவர் மீது இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது. -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG