அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 18 ஜனவரி, 2013

மகளை வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற இராணுவ வீரர் மீது தந்தை கத்திக்குத்து

12 வயதுதான தனது மகளை வல்லுறவுக்குட்படுத்த முயன்ற இராணுவ வீரர் ஒருரை தந்தை கத்தியால் குத்திய சம்பவமொன்று ராஜாங்கனை, யாய பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் போது காயமடைந்த இராணுவ வீரர் ராஜாங்கனை கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை, சிறுமியின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் மேற்படி இராணுவ வீரர், அச்சிறுமியின் வீட்டுக்குச் சென்று அவரது கையடக்கத் தொலைபேசியிலிருந்த பாலியல் தொடர்பான வீடியோக்களை சிறுமிக்கு காண்பித்த நிலையில் அவரை வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்துள்ளார். இதன்போது, குறித்த சிறுமி சத்தமிட்டு கத்தியதை அடுத்து அங்கு விரைந்த சிறுமியின் தந்தை, இராணுவ வீரரை தப்பிச் செல்ல விடாது தடுத்து கத்தியால் குத்தியுள்ளார். சந்தேகநபரான இராணுவ வீரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கான சிகிச்சைகள் முடிவடைந்ததும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராஜாங்கனை பொலிஸார் தெரிவித்தனர். -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG