மனைவியை நடு வீதியில் வைத்து கத்தியால் வெட்டியும் குத்தியும் கொலை செய்த கொடூரச் சம்பமொன்று நீர்கொழும்பு சிலாபம் பிரதான வீதியில் அமைந்துள்ள வெலிஹேன 18 ஆம் கட்டைப் பகுதியில் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொச்சிக்கடை போலவத்த பிரதேசத்தைச் சேர்ந்த ரோஹினி துஷாரி (வயது 29) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொடூரமான முறையில் கொலையுண்டவராவார். இரத்த வெள்ளத்தில் வீதியோரத்தில் கிடந்த பெண்ணின் சடலத்தை பார்வையிடுவதற்காக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பிரதான வீதியில் ஒன்று கூடியதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இதனைக் கட்டுப்படுத்தும் பணியில் கொச்சிக்கடை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் ஈடுபட்டனர்.
இதேவேளை மனைவியை கொலை செய்த நபர் கத்தியுடன் கொச்சிக் கடை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொச்சிக்கடை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
-->
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
வெள்ளி, 4 ஜனவரி, 2013
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக