அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 15 செப்டம்பர், 2012

ஆப்கானின் முக்கிய சர்வதேச படைத் தளத்தில் தாலிபான்கள் தாக்குதல்


ப்கானிஸ்தானில் தங்கியுள்ள சர்வதேச படைகளின் மிக முக்கியத் தளங்களில் ஒன்றான ஹெல்மண்ட் மாகாணத்தின் கேம்ப் பாஸ்ச்சன் முகாமில் தாலிபான் ஆயுததாரிகள் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளனர்.
அமெரிக்காவில் தொழில்முறையிலன்றி உருவாக்கப்பட்டுள்ள இஸ்லாத்தை இழிவுபடுத்தும் விதமான வீடியோவுக்கு பழிவாங்கும் விதமாக இத்தாக்குதலை நடத்தியதாக அவர்கள் கூறுகின்றனர். இந்த வீடியோ தொடர்பில் பல நாடுகளில் வன்முறைமிக்க ஆர்ப்பாட்டங்கள் நடந்திருந்தன. நான்கு மணி நேரங்கள் நீடித்த இந்தத் தாக்குதலில் துப்பாக்கிகள் மோர்டார் குண்டுகள் ரொக்கெட் எறிகுண்டுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி தாலிபான்கள் கேம்ப் பாஸ்ச்சன் முகாமின் பாதுகாப்பு எல்லையைக் கடந்து ஊடுருவினர். இத்தாக்குதலில் அமெரிக்க மரைன்ஸ் படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். தாலிபான் தரப்பில் குறைந்தது பதினைந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதலாளிகள் அனைவரையும் அழித்தொழிக்கும் நடவடிக்கைகள் தொடருவதாக நேட்டோ கூட்டணிப் படைகள் கூறுகின்றன. தற்சமயம் இந்த முகாமில்தான் பிரிட்டிஷ் இராணுவத்தில் கேப்டன் நிலையிலுள்ள இளவரசர் ஹாரியும் இருந்தார். அவருக்கு இத்தாக்குதலில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG