அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

யாழ்.நகரப் பகுதியில் இடம் பெற்ற திருட்டுகள் தொடர்பாக மூவர் கைது


யாழ்.நகரப் பகுதியில் இடம்பெற்ற வழிப்பறி, சங்கிலித் திருட்டுகள் தொடர்பாக மூன்று பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மோட்டார் சைக்கிள்களில் ஆளரவமற்ற இடத்தில் தனிமையில் செல்லும் பெண்களிடம் தங்க நகைகளை அறுத்துச்செல்வதில் இந்தக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்கள் .
கடந்த புதன் கிழமை தனிமையில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியை அறுக்க முற்பட்டவேளையில் குறிப்பி;ட்ட ஒருவர் பிடிபட்டதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டார்கள். இந்நிலையில் குறிப்பி;ட்ட சம்பவத்துடன்மேலும் இருவர் தொடர்புடையவர்கள் என்ற தகவல் வெளி வந்த நிலையில் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் யாழ்ப்பாணம் நகர உள்ளுராட்சி மன்றத்தில் கடமையாற்றுபவர்கள் என்ற தகவலும் வெளிவந்துள்ளமை குறிப்பி;டத்தக்கதாகும். -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG