அம்பலாந்தோட்டை, கொக்கல்ல பகுதியில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் ஆயுதத்தை பறிக்க முயன்றதாகக் கூறப்படும் நபர் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் அந்த நபர் காயமடைந்துள்ளார்.
தாக்குதல் சம்பவம் ஒன்று தொடர்பில் பொலிஸாரின் 119 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து குறித்த பகுதியில் பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர். சந்தேக நபருடன் கும்பல் ஒன்றை கைதுசெய்ய பொலிஸார் முயன்றபோது அவர்கள் பொலிஸாரை தாக்கியதுடன், பொலிஸாரின் முச்சக்கரவண்டியையும் சேதப்படுத்தியுள்ளனர். இதன்போது பொலிஸ் சார்ஜன்டின் ஆயுதத்தை பறிக்க முயன்றதாகக் கூறப்படும் இவர்களில் ஒருவர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தில் சந்தேக நபரும் 2 பொலிஸாரும் காயமடைந்துள்ள நிலையில், அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். -->


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக