அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

எமது மக்களை கையேந்த வைத்தவர்கள் கடந்தகால அரசியல் தலைவர்களே -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா


ழிவுயுத்தத்திற்கு வித்திட்டதுடன், எமது மக்களை கையேந்த வைத்தவர்கள் கடந்தகால அரசியல் தலைவர்களே என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யாழ்ப்பாண பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (10) அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவின் கீழும் அமைக்கப்பட்ட சிவில் பாதுகாப்புக் குழுவில் அந்தந்தப் பகுதி கிராம சேவையாளர்களும் இணைந்து செயற்பட வேண்டும்.

அத்துடன் யாழ்.மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதும், முன்னெடுக்கப்படவுள்ளதுமான செயற்றிட்டங்கள் தொடர்பிலும் வாழ்வெழுச்சித் திட்டத்தின் கீழான விவசாயம், கடற்றொழில்துறை, கால்நடை, கைத்தொழில் அபிவிருத்தி சபை, விதாதவள நிலையம் ஆகியவற்றினூடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்றிட்டங்கள் தொடர்பிலும் அமைச்சர் அவர்கள் கவனம் செலுத்தியதுடன், மக்களது வாழ்வாதார மேம்பாட்டுக்கான உள்ளீடுகளை வழங்குவது மட்டுமன்றி அவற்றினது பயன்பாடுகள்ஈ பெறுபேறுகள் தொடர்பிலும் துறைசார்ந்தவர்கள் கவனம் செலுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தாமதமாவதற்கு ஒப்பந்தக்காரர்கள் தடையாகவோ அல்லது வேலைகளை மெதுவாக முன்னெடுத்தாலோ அவற்றை புதிய ஒப்பந்தக்காரர்களி;டம் வழங்குமாறும் கேட்டுக்கொண்டதுடன், வடிகால்களுக்கு தடை ஏற்படாத வகையில் கட்டிட நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும், இதுதொடர்பில் துறைசார்ந்தவர்கள் எச்சரிக்கையாகவும், விழிப்பாகவும் இருக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்ட அமைச்சர் அவர்கள் இக்கூட்டத்தில் கலந்துரையாடுவது மட்டுமல்ல முடிவுகளை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் தெரிவித்தார்.

அத்துடன் கடந்த கால அரசியல் தலைமைகள் விட்ட தவறுகளினாலேயே எமது மக்கள் அழிவு யுத்தத்திற்கு முகம் கொடுத்ததுடன் கையேந்தும் நிலைமைக்கும் உள்ளாகினர் என்றும் அந்த நிலையை மாற்றியமைப்பதற்கு எல்லோரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
இதேவேளை கல்முனை, மண்டைதீவு, குருநகர், ஆகிய பகுதிகளில் உள்ளடங்கிய பகுதிகளில் வெளிச்சவீடு அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இதில் அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களைச் சார்ந்தோரிடமும், மக்கள் பிரதிநிதிகளிடமும் கருத்துக்கள் கேட்டறியப்பட்டன.

இதன்போது யாழ்ப்பாண பிரதேச செயலர் திருமதி சுகுணரதி தெய்வேந்திரம், யாழ்.மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, யாழ்.மாநகர ஆணையாளர் பிரணவநாதன் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் உடனிருந்தனர்.




-->

0 கருத்துகள்:

BATTICALOA SONG