அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 12 செப்டம்பர், 2012

வவுனியாவில் விடுதலைப்புலிகளின் பணம் 20 கோடி ரூபா மீட்பு


மிழீழ விடுதலைப் புலிகளினால் வவுனியா பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்ட பணம் 20 கோடி ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பணத்தையும் ஆயுதங்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் மிகவும் நுட்பமான முறையில் மறைத்து வைத்திருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
வவுனியா அச்சுபுரம் வாவிக்கு அருகாமையில் இந்தப் பணமும் ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன. இந்தப் பணத்தையும் ஆயுதங்களையும் மீட்கச் சென்ற தரப்பினர் பொலிஸாரைக் கண்டு தப்பிச் சென்றுள்ளனர். குறித்த கும்பலின் ப்ராடோ வாகனம் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG