அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 20 செப்டம்பர், 2012

இரா.சம்பந்தன் - ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலக அதிகாரிகள் சந்திப்பு


க்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆசியாவுக்கான களச்செயற்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு பிரிவின் தலைவரான ஹின்னி மெகாலி மற்றும் அவரது அணியின் அங்கத்தவர்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஐ.நா வதிவிட இணைப்பாளர் சுபினே நந்டியின் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை காலை இந்த சந்திப்பு இடம்பெற்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தூதுக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன், பி.செல்வராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அடங்கியுள்ளனர். பாதுகாப்பு வலயங்கள் குறிப்பாக வலிகாமம், சம்பூர் பிரதேசங்களில் பிரகடனப்படுத்தப்பட்டு மக்களை மீளக்குடியேறவிடாது தடுத்தல், அவர்களின் நிலங்களை இராணுவ தேவைக்காக கைப்பற்றுதல், அபிவிருத்திக்கு என கூறிக்கொண்டு பெரும்பான்மையின மக்களை குடியேற்றுதல், தமிழ் மக்களை அவர்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு போகவிடாது தடுத்தல், வடக்கு கிழக்கில் சனத்தொகை விகிதாசாரத்தை மாற்றுதல், காணாமல் போதல், தடுப்பில் உள்ளோர், பொறுப்புக் கூறுதல், ஏற்புடைய அரசியல் தீர்வு போன்ற விடயங்கள் பற்றி இந்த சந்திப்பின்போது பேசப்பட்டுள்ளன. இலங்கை அரசாங்கமானது, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தவுள்ளதா என்பது பற்றியும் ஐ.நா மனித உரிமைப் பேரவையின் மார்ச் 2012 தீர்மானம் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை சுதந்திரமாகவும் நடைபெற்றதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. -->

0 கருத்துகள்:

BATTICALOA SONG