அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 10 செப்டம்பர், 2012

மாகாணசபைத் தேர்தல்: மட். மாவட்டத்தில் மு.பா. உறுப்பினர்கள் உட்பட 10 பேர் தோல்வி


ட். மாவட்டத்தில் மாகாணசபைக்குத் தெரிவான 8 உறுப்பினர்கள் மற்றும் இரண்டு முன்னாள் பா. உறுப்பினர்கள் உட்பட 10 பேர் இம்முறை தோல்வியடைந்துள்ளனர். நடந்துமுடிந்த கிழக்கு மாகாணசபை தேர்தலில் கடந்த முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து மாகாணசபைக்குத் தெரிவான நான்கு உறுப்பினர்கள் இம்முறை தோல்வியைத்தழுவியதுடன் இரண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
கடந்தமுறை மாகாணசபை உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட்ட பூ.பிரசாந்தன்,எட்வின் கிருஸ்ணானந்தராசா,திரவியம் மற்றும் முபின், இஸ்மாயில், ஜவாகீர்சாலி, அ.சசிதரன்,மாசிலாமணி ஆகியோரே இவ்வாறு தோல்வியைத் தழுவியுள்ளனர். அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த தங்கேஸ்வரி மற்றும் அலிஸாகிர் மௌலானா போன்றவர்களும் தோல்வியைத் தழுவியுள்ளனர். அத்துடன் கிழக்கு மாகாணசபை ஆரம்பிக்கப்பட்ட 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மாகாணசபை உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்ட இரா.துரைரெட்ணம் 2008ஆம் ஆண்டு மாகாணசபை உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்ட இவர் மீண்டும் இம்முறையும் மாகாணசபை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG