அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

புதிய கட்சி ஆரம்பித்தார் தங்கேஸ்வரி


மிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தங்கேஸ்வரி கதிராமன், கிழக்கு தமிழ் மக்களின் அடையாளத்தை ஊக்குவிப்பதற்காக புதிய கட்சியொன்றை உருவாக்கியுள்ளார். தமிழ் மக்களின் சுதந்திரக் கட்சி என இக்கட்சிக்கு பெயரிடப்பட்டுள்ளது.
தேர்தல் திணைக்களத்தில் பல தமிழ் கட்சிகள் பதிவுசெய்யப்பட்டுள்ள போதிலும் அவற்றில் எதுவும் கிழக்கு மக்களின் சமூக, கலாசார, மொழி அடையாளங்களுக்காக செயற்படவில்லை என அவர் கூறினார். "கிழக்கு தமிழ் மக்களுக்காக ஒரு கட்சி வேண்டும். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் சுயேட்சைக் குழுவாக எமது வேட்பாளர்களை களமிறக்கியுள்ளோம். அரசாங்கத்துடன் ஒத்துழைத்து, மக்களுக்கு சேவையாற்ற நாம் விரும்புகிறோம்" என அவர் தெரிவித்தார். தமிழ் மக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றியுள்ளது எனவும் அவர் கூறினார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG