அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

பேஸ்புக், ட்விட்டரில் நான் இல்ல.. இல்லவே இல்ல...! - சூர்யா


மூக வலைத் தளங்களான பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் நான் இல்லை. என் பெயரில் இந்த தளங்களில் உள்ள கணக்குகள் போலியானவை என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார். பேஸ்புக், ட்விட்டரில் அநேகமாக பல நட்சத்திரங்களும் கணக்கு தொடங்கி, தங்களைப் பற்றி அப்டேட் செய்து வருகின்றனர். நடிகர் சூர்யா பெயரிலும் பேஸ்புக்கில சிலர் அப்டேட் செய்து வருகின்றனர்.
மாற்றான் படம் வரும் செப்டம்பர் 19-ம் தேதி ரிலீஸ் ஆவதாக சூர்யாவே அறிவித்துள்ளது போல பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இதுகுறித்து சூர்யா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "என் பெயரில் போலியாக ட்விட்டரிலும், பேஸ்புக்கிலும் சிலர் அப்டேட் செய்வதை அறிந்தேன். ஏதோ நான்தான் தினமும் இப்படி செய்வதாக ரசிகர்கள் நினைக்க வாய்ப்புள்ளது. இது தவறு. ரசிகர்கள் நம்ப வேண்டாம்," என்று கூறியுள்ளார். சூர்யாவின் அதிகாரப்பூர்வமற்ற போலி பேஸ்புக் கணக்கைத் தொடர்பவர்கள் எண்ணிக்கை 1.3 லட்சம் பேருக்கு மேல்... இது எப்படி இருக்கு!!

0 கருத்துகள்:

BATTICALOA SONG