அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

தொலைக்காட்சி நாடக நடிகையின் ஹோட்டலில் விபசாரம்?

சினிமா மற்றும் தொலைக்காட்சி நாடக நடிகைக்கு சொந்தமானது எனக் கூறப்படும் மொறட்டுவையில் உள்ள ஒரு ஹோட்டலை பாணந்துறை - வலன மத்தி தீச்செயல் எதிர் அணி திடீர்ச் சோதனை நடத்தியபோது, பாலியல் தொழில் புரிபவர்கள் எனக் கருதப்பட்ட இருவரும் இளைப்பாறிய பொலிஸ் சார்ஜண்டான ஹோட்டலின் முகாமையாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பாலியல் தொழிலாளியாக வேலை செய்ததாகக் கூறப்படும் பெண்களில் ஒருவர் அதே ஹோட்டலியே ஒரு வருடம் 3 மாத வயடைய தனது குழந்தையையும் வைத்திருந்தார். இந்தப் பெண் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது முகாமையாளர் குழந்தையைக் கவனித்துக்கொண்டிருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் தான் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். பணக்கார வர்த்தகர்கள் போலவும் ஒரு பெண்ணின் சேவையை நாடி வந்தவர் போலவும் நடித்த ஒருவரை பொலிஸார், சந்தேக நபர்களை தமது பொறியில் வீழ்த்தப் பயன்படுத்தினார். இவர் 8,000 ரூபா கொடுத்து ஒரு பெண்ணை தெரிந்து எடுத்தாராம். இதன் பின் அங்கு வந்த பொலிஸார் சந்தேக நபர்களை கைதுசெய்தனர். இந்த ஹோட்டலில் சோதனை நடத்துவதற்கான தேடுதல் ஆணையை பொலிஸார் மொறட்டுவை நீதவானிடம் பெற்றிருந்தனர். ஆரம்பக்கட்ட விசாரணைகள் முடிந்த பின் சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG