அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை கிழக்கில் ஆளுநராக நியமிக்கின்ற நிலைமை நீக்கப்படவேண்டும்: ரவூப் ஹக்கீம்


ய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை கிழக்கு மாகாணத்திற்கென ஆளுநராக நியமிக்கின்ற நிலைமை நீக்கப்படவேண்டும். இதன்மூலம் இம்மாகாணத்தில் ஆளுநர் ஊடாக இடம்பெறுகின்ற சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும்' என நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
மூதூர் பொது மைதானத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'இலங்கையிலுள்ள எந்த மாகாண ஆளுநருக்கும் இல்லாத அதிகாரம் கிழக்கு மாகாண ஆளுநருக்கு உள்ளது. இதனால் இலங்கை அரசியல் யாப்பு மூலம் மாகாண சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் வலுவிழந்து கிடக்கின்றன. இம்மாகாணத்தில் இடம்பெற்று வரும் பொம்மை ஆட்சியை முடிவிற்கு கொண்டு வருவதும் அபிவிருத்தி என்ற மாயையில் உரிமைகள் பறிக்கப்படும் நிலைமையை இல்லாமற் செய்வதும் அவசியமாகும். எனவேதான், யாப்பு ரீதியாக வழங்கப்பட்டுள்ள உரிமையை பறிப்பதற்கு எதிராக இம்மாகாண தேர்தல் மூலம் ஆணைவழங்குமாறு கோருகின்றோம். தமது அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் இத்தேர்தல் பற்றி பிராந்திய வல்லரசுகளும் கூர்ந்து அவதானித்து கொண்டிருக்கின்றன. எனவே, இம்மாகான சபைத்தேர்தல் முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரையில் மிக முக்கியமான தேர்தலாகும். முஸ்லிம் மக்கள் வாக்களிப்பு விகிதாசாரத்தை அதிகரித்து அதிக ஆசனங்களைப் பெற்று கொள்வதற்கு ஒன்றிணைய வேண்டும்' என்றார். இப்பிரசாரக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பஷீர் சேகுதாவூத், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முத்தலி பாவா பாரூக், அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எல்.தவம், திருகோணமலை மாவட்ட வேட்பாளர்களான ஆர்.எம்.அன்வர், சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர், ஹஸன் மௌலவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG