அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் - சங்கரி, சித்தார்த்தன் சந்திப்பு


லங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய சர்வ கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். (பத்மநாபா அணியின்) செயலாளர் நாயகம் த.சிறீதரன் ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, நாட்டின் தற்போதைய நிலவரங்கள் குறித்து விபரமாக கலந்துரையாடியுள்ளார்கள். சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின் போது மேற்படி தமிழ் கட்சிகளின் தலைவர்களினால் இந்திய சர்வகட்சி நாடாளுமன்ற குழுவினரிடம் தமிழ் மக்களினதும் நாட்டினதும் நிலைமைகள் தொடர்பாக மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. இம்மகஜரில் குறிப்பிட்ட விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடிய தூதுக்குழுவினர், இவை குறித்து இந்திய அரசுக்கு எடுத்துரைப்பதாக உறுதியளித்துள்ளனர் என புளொடின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG