அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

தோனி சிகிச்சைக்காக மும்பை விஜயம்?


சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மஹேந்திர சிங் தோனி காயம் காரணமாக சிகிச்சை பெற மும்பைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐந்தாவது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும், புனே வொரியர்ஸ் அணிக்குமிடையில் கடந்த சனிக்கிழமை புனேயில் நடைபெற்ற போட்டியில் தோனி முழுமையான உடற்தகுதியுடன் காணப்படவில்லை. அவர் சில தருணங்களில் நடப்பதற்கும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் தனது மனைவியுடன் வைத்தியரை பார்ப்பதற்காக மும்பைக்குச் சென்றுள்ளதாக தகவல்கள் கசிந்தன. மேலும், அடுத்த மூன்று அல்லது நான்கு போட்டிகளில் தோனியால் விளையாட முடியாது போகலாம் எனவும் செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும் சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இத்தகவலை மறுத்துள்ளது. தோனி மும்பை சென்றுள்ளது உண்மைதான், ஆனால் அவர் சிகிச்சைக்காக செல்லவில்லை, அவரது நண்பர் திருமணத்துக்காக சென்றுள்ளார் என சுப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாக சபை அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG