அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 9 மார்ச், 2012

யாழில் சிப்பாய் ஒருவர் இரு சகாக்களை கொன்றுவிட்டு தானும் தற்கொலை


யாழ்ப்பாணம், சாவகச்சேரி ஸ்ரீமுருகன் ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் படைவீரர் ஒருவர் ஏனைய இரு படைவீரர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தன்னைத்தானே சுட்டுக் கொன்றுள்ளமை தொடர்பில் விசாரணையின் மூலம் தெரியவருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்புகராச்சி தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கிடையிலுள்ள தனிப்பட்ட பகைமையே இச்சம்பவத்திற்கு காரணமெனவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். மேற்குறித்த சம்பவத்தில் சிலாபம், கலாவத்தையைச் சேர்ந்த எம்.எஸ்.சி.பெர்ணான்டே (வயது 20), தங்காலை, உஷாப்பிட்டியவைச் சேர்ந்த கே.ஜ.டி.கப்புக்கொட்டுவ (வயது 29) மற்றும் காலகல்வத்தயைச் சேர்ந்த ஆர்.எம்.ஆர்.ரட்நாநாயக்கா (வயது 24) ஆகியோரே உயிரிந்தவர்களாவர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG