அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 9 மார்ச், 2012

பிரதி பொலிஸ் மா அதிபர் அமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்


யாழ் மாவட்டத்திற்கான புதிய பிரதி பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா மற்றும் புதிய பொலிஸ் அத்தியட்சகர் குகனேஸ்வரன் ஆகியோர் இன்று (8) மாலை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
அமைச்சர் அவர்களது யாழ் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது அமைச்சர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் தனது பெயரையோ அல்லது தனது கட்சியின் பெயரையோ பயன்படுத்தி சட்டவிரோத செயல்களில் எவரேனும் ஈடுபடுவார்களாயின் அவர்களுக்கு எதிராக சட்டப்படி உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென பணிப்புரை வழங்கினார். அத்துடன் சமூக முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு சட்ட ஒழுங்குகளை உரிய முறையில் மேற்கொள்ளுமாறும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


0 கருத்துகள்:

BATTICALOA SONG