அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 29 மார்ச், 2012

மனித உரிமைகள் விவகாரத்தில் அமெரிக்கா இரட்டை வேடம்: இலங்கை குற்றச்சாட்டு


னித உரிமைகள் விவகாரத்தில் அமெரிக்கா இரட்டை வேடம் பூணுகிறது எனவும் இஸ்ரேல் விவகாரத்தில் ஒரு கொள்கையும் இலங்கை விவகாரத்தில் மற்றொரு கொள்கையையும் பின்பற்றுகிறது எனவும் இலங்கை அரசாங்கம் குற்றம்சுமத்தியுள்ளது.
யூத குடியேற்றங்கள் காரணமாக பலஸ்தீனர்களின் மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பாக உண்மை கண்டறியும் குழுவொன்றை அனுப்புவதற்கான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை அமெரிக்கா எதிர்த்தது என இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவை பதில் பேச்சாளர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறினார். 'ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலுள்ள 47 நாடுகளில் 36 நாடுகள் இத்தீர்மானத்திற்கு ஆதரவளித்தன. அமெரிக்கா மாத்திரம் எதிர்த்தது. 10 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கான தனது தூதுவரை வாபஸ் பெறப் போவதாகவும் அப்பேரவையுடனான உறவை துண்டித்துக்கொள்ளப் போவதாகவும்கூட இஸ்ரேல் அச்சுறுத்தியது' எனவும் அவர் கூறினார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG